தியாகத்தீ 7ம்நாள்!!

You are currently viewing தியாகத்தீ 7ம்நாள்!!

தமிழின விடுதலைப்போராட்ட
வீரனாக தேசியத்தலைவனின்
கால்த்தடம் பின்பற்றிய நாள் தொடக்கம்
ஈகப்போரில் குதிக்கும் வரை
ஈழத்தின் விடிவெள்ளியாய்
ஒளிர்ந்து கொண்டே இருந்தான் பார்த்தீபன்!

ஒரு இயந்திரத்தின் தொழிற்பாட்டிற்கு
நிகராக செயலாற்றும்
செயல் வீரன்!

எதிரியின் கையில்
அகப்பட்டபோதும்
எதிர்வினையாற்றி
எம்பிப்பாய்ந்தவன்!

எதிரியின்
இரவைகளை
உடலிலே தாங்கியதால்
குடலிலே சிறுபகுதியை
இழந்தவன்!

ஆனாலும்
அரசியல் புலியாய்
மக்களின் சமூகப்பிணக்குகளை
சாணக்கியமாய்
தீர்ப்பவன்!

அதனாலேதான்
பார்த்தீபன் பாசக்காரனாய்
மக்களின் இதயத்தை
கொள்ளையடித்தவன்!

இதனால்த்தான்
ஏழாம் நாளாகியும்
அருகிலே மக்கள்படை
விலகாது நிற்கிறது!

இந்திய அதிகாரிகளுடன்
பேச்சு வார்தையில் ஈடுபட்ட
செய்திக்காய் காத்துக்கிடந்தனர்!
திலீபனை எப்படியாவது
காப்பாற்றவேண்டுமென
துடித்தனர்!

கிடைத்த பதில்
திலீபன் பற்றி
திடமான முடிவு
எட்டப்படவில்லை
என்பதுதான்!

அசையவும் முடியாது
பேசவும் முடியாது
அசைவின்றி
வெறும் உருவம் மட்டும்
நீட்டி நிமிர்ந்து கிடந்தது!

தாங்கோணா துயரத்தின்
நடுவே திலீபனின் காதில்
விழுந்த செய்தியால்
உதடுகள் புன்னகையை
மட்டுமே உதிர்த்துவிட்டு
உறுதியோடு கரகரத்த
குரலில் சொன்னார்!

ஐந்து கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படுவதாக
இருந்தால்
எழுத்தில் தரவேண்டும்
இல்லையேல்
உண்ணாநிலைப்போராட்டம்
தொடரும்
நிறுத்தப்படமாட்டாது!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply