தியாகி திலீபன் அவர்களின்-36,வது ஆண்டின் இரண்டாவது நாளான இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் காலையும் மாலையும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் இடம் பெற்று வணக்க நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப் பட்டு வரும் இந்த நினைவு வணக்க நிகழ்வுகள் இன்று கட்சியின் மகளிர் அணிச் செயலாளர்- திருமதி கிருபா- கிரிதரன் தலைமையில் நடைபெற்றன.
காலை – 09, மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற வணக்க நிகழ்வில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரால் நினைவுச் சுடர் ஏற்றப் பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் இடம் பெற்றது.
தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு மாலை-05, மணிக்கு நிறைவு பெற்றது மாலை-05, மணிக்கு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரால் மாலை நேர நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இன்றைய நாள் நிகழ்விலும் மக்கள் தொடர்ச்சியாக வருகை தந்து உணர்வு பூர்வமாக வணக்கம் செலுத்தியிருந்தனர்.