தியாகி திலீபனின் நினைவு சுமந்த ஊர்தி திருகோணமலை கப்பல்துறை இராணுவமுகாமிற்கு முன்பாக வைத்து இன்று -பகல் ( 17.09.2023) ஞாயிற்றுக்கிழமை சிங்கள இனவாத குண்டர்களால் கொடூரமான முறையில் அடித்து உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன்,மற்றும் செயற் பாட்டாளர்களான பிறேம்,கண்ணன், ஆகியோர் மீதும் குண்டர்களால் தாக்குதல்கள் நடாத்தப் பட்டிருக்கிறது.