தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் – நீங்காத நினைவுகளில்!

You are currently viewing தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் – நீங்காத நினைவுகளில்!

தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் வீரவணக்க நாள் இன்றாகும்.

இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் முல்லை மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடியலுக்காய் தன்னை உருக்கி ஒளிதந்த தீயாக தீபம்……………

தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் - நீங்காத நினைவுகளில்! 1

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 விண்ணையும் சாடும் புலி வீரத்தின் சரித்திரம்   …!

தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் - நீங்காத நினைவுகளில்! 2

தமிழீழத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் பங்குபற்றிவிட்டு ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26.09.2001 அன்று காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், வான்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments