திருகோணமலை மாவட்ட செயலகத்தினுள் நேற்று
(28.08.2023) திங்கட்கிழமை பகல், பிக்குகள் குழுவாகப் புகுந்து அடாவடித்தன அச்சுறுத்தலில் இறங்கியதால் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று பகல்
மாகாண ஆளுநர் செந்தில்- தொண்டமான், தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் சந்திப்பின் போது மாவட்ட செயலகத்தினுள் அத்து மீறி நுளைந்த பிக்குகள் திடீரென சந்திப்பு நடந்த பகுதிக்குச் சென்று அளுநர் முன்பாக குழப்பம் விளைவிக்கும் வகையில் சத்தமிட்டதுடன் தரையில் அமர்ந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை தமிழ் மக்களின் வாழிடமான நிலாவெளி பெரியகுளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட இருந்த விகாரை அமைப்புப் பணிகளுக்கு பிரதேச சபையாலும் பிரதேச செயலகத்தாலும் தடை விதிக்கப்பட்மையையும் தடையை அகற்றி விகாரை அமைப்புக்கு ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் எனக்கோரியே பிக்குகள் இந்த அடாத்தான நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக மாவட்ட செயலக பிரதான வாயில் அமைந்துள்ள சாலையை மறித்துத் திரண்டிருந்த பெருமளவு பிக்குகளாலும், சிங்கள இனவாதிகளாலும் பெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்ட நிலையிலேயே இந்த அடாவடித்தனம் புரியப் பட்டுள்ளது.இதன்போது ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகளாலும் கடமையில் இருந்த காவல்த்துறை யினராலும் பிக்குகள் தடுக்கப்படாத நிலையில் பிக்குகள் குறித்த மாநாட்டு மண்டபத்தினுள் நுளையும் காணொளி வெளியாகியுள்ளமைபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.