திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்களுக்கு இறுதி வணக்கம்!

You are currently viewing திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்களுக்கு இறுதி வணக்கம்!

வரலாற்றில் பல மனிதர்கள் தோன்றி மறைலாம் ஆனால் ஓரு சிலரே வரலாற்றில் கால்பதித்து நிலையாய் வாழ்கின்றனர்.

அவ்வாறே காலம் தந்த உன்னத தலைவனின் வழிகாட்டலில் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்டகாலமாக தன்னையும் ஒரு சேவையாளராக இணைத்துக் கொண்டவர் அன்னை திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்கள்

தமிழீழ மண்ணில் விடிவிற்காக ஓயாது அரும்பாடுபட்ட அன்னையை இன்று நாம் இழந்து நிற்கிறோம்

நாட்டுப்பற்றாளர் கதிரமலை கந்தசாமி அவர்களின் அன்புத்துனணவியும், மாவீரன் லெப். கேணல் வெற்றியழகன் (விக்டர்) அவர்களின் தாயாருமான திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்கள் 21.03.2022 அன்று கனடாவில் தனது 81வது அகவையில் சாவடைந்தார்.

தமிழீழ மண்ணின் மக்களின் விடுதலையை நேசித்த அன்னை இனவிடுதலைப் போரிற்கு தன் மகனை உவந்தளித்தார் .அத்தோடு இவர் மருத்துவத்துறையில் ஒரு மருந்தாளராக தன்னால் முடிந்தளவு எவ்வளவு பணிகளைச் செய்யமுடியுமோ அனைத்தையும் அர்ப்பணிப்போடு செய்திருந்தார் .

அன்னையின் சமூகப்பற்றுமிக்க குணம் தமிழீழ மக்களுக்கும் போராளிகளும் பெரும் சேவையாகவே அமைந்திருந்தது .

தன் கணவரான நாட்டுப்பற்றாளர் கதிரமலை கந்தசாமி அவர்களோடு இணைந்து சமூக மேம்பாட்டுத் துறையில் அயாரது சேவையாற்றிருந்தார் 

நெருக்கடியான போர்ச்சுழல் மிக்க காலகட்டங்களில் போராளிகளுடன் இணைந்து நின்று மருந்தாளராக இடைவிடாது சேவையாற்றினார் ஒரு தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக உறுதியோடு இறுதிவரை தமிழீழத்தில் தன் அர்பணிப்புமிக்க பணியைச் செய்திருந்தார் 

                இறுதியில் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தபோதும்

கடல்கடந்து தேசம் கடந்தும் இவர் பணி தொடர்ந்தது தள்ளாத வயதிலும் பலமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஒரு இன அழிப்புச் சாட்சியாய் போரின் வடுக்களைச்சுமந்து, வலிகளைத்தாங்கி, எதற்கும் தயங்காது தன் சாட்சியங்களை வழங்கியிருந்தார்.

                இறுதிவரை தாயகப்பற்றோடும் உன்னத இலட்சியத்தோடும் வாழ்ந்த அன்னை திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்களுக்கு    தமிழ்த்தேசிய   ஊடகம் தனது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னையின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply