திரு. கஜேந்திரகுமாரை கைது செய்ய ஸ்ரீலங்கா காவல்துறை முயற்சி! கைது உத்தரவோடு வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல்துறை!!

You are currently viewing திரு. கஜேந்திரகுமாரை கைது செய்ய ஸ்ரீலங்கா காவல்துறை முயற்சி! கைது உத்தரவோடு வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல்துறை!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கொழும்பில் வைத்து கைது செய்யும் உத்தரவோடு, காவல்துறை அவரது வீட்டில் முற்றுகையிட்டுள்ளதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் திரு. நடராஜர் காண்டீபன் தமிழ்முரசத்துக்கு தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இலங்கை நேரப்படி அதிகாலை, 05.30 மணியளவில் திரு, கஜேந்திரகுமார் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்யும் ஆணையை காட்டி திரு. கஜேந்திரகுமாரை கைது செய்ய முனைந்தபோதும், கைதுக்கு முன்னதாக, திட்டமிட்டபடி தனது நாடாளுமன்ற உரையை நிறைவுசெய்வதற்கான அனுமதியை பெறுவதில் திரு. கஜேந்திரகுமார் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்புரிமை தொடர்பான பிரச்சனையொன்றை முன்வைத்து நாடாளுமன்றத்தில் திரு. கஜேந்திரகுமார் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவரது உரை அரசுக்கு சிக்கல்களை கொண்டுவரமென்ற நிலை தோன்றியதால் அதிரடியாக கைது செய்வதற்கு அரச தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென முன்னதாக தகவல்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தெரியவருகிறது.

காணொளி:

10000000_1672001653300447_4385345542950250090_n

10000000_268913145693958_8911745004668340451_n

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கைது செய்யப்பட்டு முதற்கட்டமாக, கொள்ளுப்பிட்டி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திரு. கஜேந்திரகுமாரை கைது செய்ய ஸ்ரீலங்கா காவல்துறை முயற்சி! கைது உத்தரவோடு வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல்துறை!! 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply