கஜேந்திரகுமார் மீது தொடரும் அரச அடக்குமுறை! நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த நீதிமன்றம்!!

You are currently viewing கஜேந்திரகுமார் மீது தொடரும் அரச அடக்குமுறை! நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த நீதிமன்றம்!!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாட்டை விட்டு வெளியேற ஸ்ரீலங்கா நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி, தாக்குதல், அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அவருக்கான பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டிய ஸ்ரீலங்கா காவல்துறை, அதனை செய்யாமல், திரு. கஜேந்திரகுமாரை அவமதிக்கும் முறையில் நடந்துகொண்டமை, சம்பவ இடத்திலிருந்தவர்களால் காணொளிகளாக ஆவணப்படுத்தப்பட்டு வெளிக்கொணரப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக கொழும்பு சென்றுகொண்டிருந்த திரு. கஜேந்திரகுமார், காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிப்பதற்காக சபாநாயகரை தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிரதி சபாநாயகரிடம் தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திரு. கஜேந்திரகுமார் கலந்துகொள்ளும் பட்சத்தில், தன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி மற்றும் காவல்துறையின் வரைமுறை மீறிய செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்து வெளிப்படுத்துவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் வரலாமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் அதேவேளையில், திரு. கஜேந்திரகுமார் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதை தடுக்கும் முயற்சிகள் கொழும்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாக, “சிங்கள ராவய” எனும் சிங்கள இனவாத அமைப்பின் சார்பில், நாடாளுமன்றத்துக்கு அருகில் போராட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டு, திரு. கஜேந்திரகுமார், நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை மீறினாரெனவும் அதற்காக அவரை கைது செய்யவேண்டுமெனவும் சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை கையளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கஜேந்திரகுமார் மீது தொடரும் அரச அடக்குமுறை! நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த நீதிமன்றம்!! 1
இதேவேளை, தனது கொழும்பு இல்லத்துக்கு இன்று வந்த கொள்ளுப்பிட்டி காவல்துறையினர், தனிச்சிங்களத்தில் அறிக்கையொன்றை தன்னிடம் கையளித்தபோது, தனிச்சிங்களத்தில் மாத்திரம் தயாரிக்கப்பட்டிருந்த அவ்வறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென தான் நிராகரித்த நிலையில், அதனை தனது முன்னிலையில் காவல்துறையினர் வாசித்து விட்டு சென்றதாகவும் திரு. கஜேந்திரகுமார் தனது “டுவிட்டர்” பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திரு. கஜேந்திரகுமார் மீது நீதிக்குப்புறம்பான விதத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து கடும் நெருக்குவாரங்களை கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரச இயந்திரம் முனைவதன் ஒரு அங்கமாக, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக மேலும் அறிவிக்கப்படுகிறது.
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments