யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குலராணி குபேந்திரன் அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், கனகநாகேஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குபேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேஸ்வரி, மகேந்திரம், சிவேந்திரம், தெய்வேந்திரம், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, குசேந்தினி, குபதர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுஜா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினம், தங்கமலர், தனபாக்கியம், செல்லமணி, சத்தியானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதேஷ், அதீஷா, பிரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மா! உன்னை போல் ஒரு தைரியமான, வீரமான, பாசமான
பெண்ணை என்றும் பார்த்ததில்லை
உன் குடும்பத்தின் மேல் நீ வைத்திருக்கும் அன்பு
கஷ்டத்தில் இருப்பவர்கள் மேல் காட்டும் அக்கறை
இவையாவும் உன் நல்ல மனதை குறிக்கும் என்றால்
அது மிகையாகாது.
பிறருக்கு என்றும் தீங்கு யோசிக்காதவள்
கஷ்டப்பட்டு முன்னேறி உன் பிள்ளைகளுக்கு
எல்லாத்தையும் கொடுத்த நீ
கடந்த மாதங்களாய் வலிகளை மட்டும் அனுபவித்தாய்
வலிகளை அனுபவித்த நீ இப்போ நிம்மதியா தூங்கு அம்மா!
இறுதி வணக்கம்
- Wednesday, 16 Feb 2022 9:00 AM – 11:00 AM
- East Cemetery, Little Chapel Tvetenveien 7, 0661 Oslo, Norway
- தகவல்: குடும்பத்தினர்