
கோப்பாய் மற்றும் வடமராட்சித் துயிலுமில்லங்களின் வெளிப்புறப் பகுதிகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இப் பணிகளை முன்னெடுத்தவர்கள் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் காவல்த்துறையினர் கடுமையான கெடுபிடிகளைச் மேற்கொண்டதோடு சிறீலங்காப் புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுத்து, மிரட்டுகின்ற வகையில் நடந்துகொண்டுள்ளனர்.