துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திப்பு!

You are currently viewing துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் முதலாவது “மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழு” மாநாடு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்திடப்பட்ட “மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்” கீழ் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதுடன், மூன்று நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் முப்படைத் தளபதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு நிலைமை மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply