துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய இரண்டாவது ஏவுகணையை தாக்கி அழித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.இதன்மூலம் ஈரான் மீண்டும் துருக்கி மீது தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.
ஈரானின் தொடர் தாக்குதலால், துருக்கியின் அதானா பகுதியில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. மேலும், அத்தியாவசிப் பணிகளில் இல்லாத ஊழியர்கள் வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமெரிக்க தூதரம் பதிவிட்டுள்ளதாவது:
மார்ச் 9, 2026 அன்று, பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவசரநிலை அல்லாத அமெரிக்க அரசு ஊழியர்கள் மற்றும் அமெரிக்க அரசு ஊழியர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதானாவின் துணைத் தூதரகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தென்கிழக்கு துருக்கியில் உள்ள அமெரிக்கர்கள் இப்போதே வெளியேறுமாறு வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.






