தென்கொரியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.
தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கூடுதலாக 2 பேர் பலியான நிலையில், இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.
தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை ‘ரெட் அலார்ட்’ ஆக உயர்த்தியுள்ளது. காய்ச்சல் அல்லது சுவாச பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. இதனால் அந்த பகுதிக்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் சென்று பார்வையிட்டார். இதன்பின் அவர் கூறும்பொழுது, நிலைமை படுமோசம் ஆக உள்ளது. இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.