ஜெர்மன் மகிழுந்து உற்பத்தியாளரான BMW, ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அனைத்து மகிழுந்து உற்பத்திகளையும் நான்கு வாரங்களுக்கு நிறுத்துகின்றது.
“இன்று முதல் நாங்கள் எமது ஐரோப்பிய மகிழுந்து தொழிற்சாலைகளையும், தென்னாப்பிரிக்காவில் உள்ள Rosslyn ஆலையையும் மூடவுள்ளோம்” என்று நிறுவனத்தின் தலைவர் Oliver Zipse கூறியுள்ளார்.
வைரஸ் நெருக்கடியின் விளைவாக இந்த ஆண்டு நிறுவனத்தின் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Daimler, Volkswagen, Ford, Fiat மற்றும் Peugeot உள்ளிட்ட பிற ஐரோப்பிய மகிழுந்து தயாரிப்பாளர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தமது தொழிற்சாலைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
மேலதிக விபரம்: VG