பிரதமருடனான அவசர சந்திப்பில் “Norwegian” விமானசேவை நிறுவனம்!

You are currently viewing பிரதமருடனான அவசர சந்திப்பில் “Norwegian” விமானசேவை நிறுவனம்!

நோர்வேயின் புகழ்பெற்ற சகாயவிலை விமானசேவை நிறுவனமான “Norwegian” நிறுவனம், நோர்வே பிரதமருடனான அவசர சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது.

நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளின் கூட்டு நிறுவனமான “SAS” என்றழைக்கப்படும் “Scandinavian Airlines System” நிறுவனத்துக்கு அவசர பொருளாதார நிவாரணமாக நோர்வே பெருந்தொகை நிதியை வழங்கியதையடுத்து, இப்போது “Norwegian Air Shuttle” நிறுவனம் பிரதமருடனான அவசர சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது.

“கொரோனா” பரவலின் எதிர்வினையாக மேற்படி விமானசேவை நிறுவனங்கள் தமது சேவைகளை கணிசமாக குறைத்துள்ளதோடு, தமது பணியாளர்களில் முறையே 10.000 பேரையும், 7.300 பேரையும் இடைநிறுத்தியுள்ளன.

முன்னதாக, நட்டம் காரணமாக “Norwegian” நிறுவனம் காலாவதியாகவும் என எச்சரிக்கை விடப்பட்டபோது, அந்நிறுவனத்தை அரசே பொறுப்பேற்று அரசுடமையாக்கவேண்டுமென வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டிருந்ததும், இவ்வேண்டுகோள் பகிரங்கப்படுத்தப்பட்டதையடுத்து, சரிந்துபோய்க்கிடந்த “Norwegian” நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி உயரத்தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நோர்வேயின் இன்னொரு உள்ளூர் விமானசேவை நிறுவனமான “Wederøe” நிறுவனமும் அரசிடம் பொருளாதார நிவாரணம் வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பகிர்ந்துகொள்ள