தேசியம் என்பது “மரபணு” சார்ந்ததல்ல. அவ்வாறாயின் தமிழர்கள் எல்லோருமே “பு*லி*களாக” மாறியிருக்கவேண்டுமே.. ?ஏன் மாறவில்லை. ?
இதைவிட இலகுவாக அண்மைய உதாரணத்தையே கொள்ளலாம், கஜேந்திரகுமார் அவர்கள் சிங்களக்காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட போது பலர் வேதனையுற்றனர். சிலர் அதை எள்ளி நகையாடினர். ஆனால் எள்ளி நகையாடிய அத்தனைபேரும் மரபணுவில் தமிழர் அல்ல என்று சொல்லலாமா ? இல்லை; அவர்களும் தமிழர்கள்தான்.
அவ்வாறாயின் கவலையுற்ற மனிதர்களுக்கும், எள்ளிநகையாடிய மனிதருக்குமான வேறுபாடுதான் என்ன ?
விடை வெகு இயல்பானது. தந்தை செல்வா மற்றும் பி*ர*பா*க*ர*ன் வழியை முழுமனதாக ஏற்று அதன்வழி சிந்தனைகொள்பவர்கள் கஜேந்திரகுமார் கைதுபற்றி கவலையுற்றார்கள். அல்பிரட்துரையப்பா,பத்மநாபா, வரதராசப் பெருமாள் ஆகியோரின் சிந்தனையிலும் சிறிது வயப்படுபவர்கள் கஜேந்திரகுமார் கைதை எள்ளி நகையாடினார்கள். இதுதான் மரபணுவிற்கும் சிந்தனைக்குமான வித்தியாசம்.
தலைவரும் மரபணுவில் தமிழரே, அல்பிரட் துரையப்பாவும் மரபணுவில் தமிழரே. ஆனால் சிந்தனையில் இருவரும் வேறுபட்டவர்கள். சிந்தனை தான் மனிதரை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாகும்.
தமிழர்களின் சிந்தனை கல்லைக் கடவுளாகக் காணும் வல்லமைகொண்டது. சாம்பலைத் திருநீறு என நெற்றியில் பூசினால் நான் தூய்மையாகிவிட்டேன் என நினைத்துக்கொள்ளும் வல்லமைகொண்டது. ஆனால் சிந்தனை தூய்மையின்றி இருந்துவிட்டால் எதனாலும் பயனில்லை.
ஏன் இதுவரை எவராலும் இந்த இனத்தின் உயர்ந்த மானுடனான பி+ர+பா+க+ர+னா+க மாற இயலவில்லை ? மரபணுதான் இனத்தைத் தீர்மானிக்குமென்றால், அவரைத்தவிர யாருமே தமிழனல்ல என்றாகிவிடுமல்லவா ? இந்தச்சிக்கலைப் புரிந்துகொண்டு, தேசியச் சிந்தனையில் ஒன்றுபடாவிட்டால், மரபணுவால் ஒரு மயிரையும் பிடுங்கமுடியாது.
ததேகூட்டமைப்பிலுள்ளவர்கள் அத்தனை பேரும் மரபணுவில் தமிழர்களே. 2009 இற்குப் பிறகு அவர்களது மரபணு மாறியதா சிந்தனை மாறியதா ? சிந்தனையே மாறியது. அவர்களது சிந்தனை தலைவரைப் பின்பற்றியிருந்தால் எத்தனையோ விடயங்களைச் சாதித்திருக்கமுடியும்.