தேர்தல்களை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் கூடிய ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்த சந்திப்பின் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குத் தனது பாராட்டுக்களையும் எதிர்க்கட்சி தலைவர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.