கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் இருக்கும் மக்களுக்கு உதவியாக, இன்று 23.4.2020 தேவிபுரத்தில் Mu/44 பிரிவில் இதுவரை உதவி கிடைக்காத 100 நாள்க்கூலி பெற்று வாழ்ந்துவந்த பெண்தலைமத்துவ குடும்பங்களுக்கு நோர்வே மக்களின் 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தருமபுரத்தில் உள்ள 32 குடும்பங்களுக்கும் .இதேபோனறு 1500 ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப்பொதிகள் நோர்வே தமிழ்மக்களின் உதவியில் வழங்கப்பட்டுள்ளது.



