பொதுமக்கள் அதிகம் கூடியதால் பொழுதுபோக்கும் இடத்தை மூடிய நோர்வே நகரம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing பொதுமக்கள் அதிகம் கூடியதால் பொழுதுபோக்கும் இடத்தை மூடிய நோர்வே நகரம்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வைரஸ் பரவலையடுத்து விதிக்கப்பட்டிருந்த அவசரநிலை கட்டுப்பாடுகள், நோர்வேயில் 21.04.20 அன்றிலிருந்து சிறுதளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நோர்வேயின் “Hamar / ஹாமார்” நகரத்தின் மிகப்பிரபலமான பொழுதுக்கு இயற்கை சூழலியல் இடமான “Koigen / கொய்கென்” என்னுமிடத்தில் நேற்றைய தினம் சுமார் 200 பொதுமக்கள் கூடியதால், அவ்விடத்தை மூடும்படி அவ்விடத்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றய வெப்பமான சீதோஷ்ண காலநிலையை அடுத்தே அங்கு பெருமளவில் மக்கள் கூடியதாகவும், எனினும் மக்கள், அரசால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி தொடர்பான நிபந்தனைகளை கடைப்பிடிக்காமல், மிக நெருக்கமாக அங்கு அமர்ந்திருந்ததாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அரசால் விதந்துரைக்கப்பட்ட இடைவெளி தொடர்பான விதியை கடைப்பிடிக்கும்படி அங்கு திரண்டிருந்த மக்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை விடுத்தும், மக்கள் அதை சட்டை செய்யாததால் அவ்விடத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதாகவும், மக்கள் யாரும் குறித்த பகுதிக்குள் உள்நுழையாதபடி அங்கு காவல் போடப்பட்டுள்ளதாகவும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள