தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இம்முறை ஜனவரி 24 ஆம் திகதி 3.30 மணிக்கு ஆரம்பமாகி போராட்டம் நடைபெற்று வருகிறது
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ,தனியார் காணிகளை அபகரித்து கட்டிய விகாரையை உடனே அகற்று , சட்டவிரோதமாக அமைத்த விகாரையை உடனே அகற்று என்னும் கோசங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெறுகிறது.