தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது !

You are currently viewing தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது !

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அடாத்தாக ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ என்ற விகாரை கட்டுமானத்தை அகற்றக்கோரியும், அதனுடன் இணைத்து பிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள மக்களின் பல பரப்புக்களைக் கொண்ட குடியிருப்புக் காணிகளையும் மக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் மற்றுமொரு போராட்டம் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

. இன்று மாலை- 4-30,மணிக்கு ஆரம்பமான இப் போராட்டத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்-பொன்னம்பலம், அவர்களுடன்,கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்களும்,மற்றும் கட்சியின் மகளிர் அணித் தலைவி வாசுகி- சுதாகர்,ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்-சுகாஸ்உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற் பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதேநேரம் இன்றும் வழமை போன்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள முன் பகுதி உட்பட்ட பகுதிகளில் சிறிலங்கா காவல்த் துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் நிலை நிறுத்தப் பட்டுள்ளனர். தற்போதும் இரவிரவாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்போராட்டம் முன்னர் அறிவித்த தற் அமைவாக நாளை இரவு – (07) மணி வரை முன்னெடுக்கப் படவுள்ளதுடன்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரால் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்கள் ஏந்தப்பட்டு கோசங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றமை கவனிக்கத் தக்கதாகும் .

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 1

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 2

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 3

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 4

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 5

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 3

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி முன்னணியின் போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது ! 4

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments