தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகத் தொடரும் போராட்டம் !

You are currently viewing தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகத்  தொடரும் போராட்டம் !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்து அடாத்தாகக் கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றக்கோரியும், விகாரைக் காணி உட்பட அதனோடு இணைந்து விகாரைக்கென ஆக்கிரமிக்கப் பட்ட பல பரப்புக்களைக் கொண்ட மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கக் கோரியும்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தின் 07,கட்டப் போராட்டம் நேற்று (28.09.2023) வியாழக்கிழமை பிற்பகல்-3.30,மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று
தொடர்ச்சியாக இரவும் முன்னெடுக்கப்பட்டு இன்று இரண்டாவது நாளாகவும் (29.09.2023) வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகத் தொடரும் போராட்டம் ! 1

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகத் தொடரும் போராட்டம் ! 2

 

 

 

 

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply