தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோ மதேவா ஒரு சிங்கள பேரினவாதி!

You are currently viewing தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோ மதேவா ஒரு சிங்கள பேரினவாதி!

செம்மணி விவகாரம் தொடர்பில் உண்மைகளை மறைப்பதற்கு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதுவா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்ற உண்மை வெளிச்சதுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி விவகாரம் தொடர்பில் அதன் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா வெளியிட்ட  இடைக்கால அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

தொல்லியல் பேராசிரியர் ராஜ சோமதேவா திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்.

தன்னை ஒரு சிங்கள தேசியவாதி அடையாளப்படுத்தும் ராஜ் சோம தேவா  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயார் ராஜபக்ஷ காலத்தில் கிழக்கு மாகாண தொல்லியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக  நியமிக்கப்பட்டவர்.

அப்படிப்பட்ட ஒருவர் செம்மணி மனித புதை குழி  அகழ்வில் ஈடுபட்டபோது நாம் அதை ஏற்கவில்லை  சர்வதேச விசாரணை தான் நீதியைத் தரும் என தெரிவித்திருந்தோம்.

தற்போது  செம்மணி அகழ்வு தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோம தேவிவின் இடைக்கால அறிக்கை நாம் நினைத்த சந்தேகங்களை உறுதிப்படுத்தி விட்டது.

சுமார் 600 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட செம்மணி புதைகுழியில் இன்னும் 600-க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என எதிர்ப்பு கூறப்படுகின்ற நிலையில் உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை.

செம்மணியில் இடம்பெற்ற குற்றங்கள் வெறுமனே ஒரு சிலர் செய்த குற்றமல்ல குற்ற மனோநிலையை ஏற்படுத்தி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு இனப்படுகொலை

இந்த அரசாங்கம் கடந்த கால ஆட்சிகளிடம் பெற்ற கொலைகள் கடத்தல்கள் தொடர்பில் நீதியான விசாரணையை மேற்கொள்வோம் என ஆட்சிக்கு வந்தார்கள்.

நான் அவர்களிடம் மீண்டும் கோரிக்கை முன் வைக்கிறோன் செம்மணி தொடர்பான உண்மையை கண்டறிய வேண்டுமானால்  ஏன் சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்கள்.

ஆகவே இந்த அரசாங்கம் இனியாவது கண்களை திறக்க வேண்டும் உண்மையை நிலை நாட்ட விரும்பினால் வாருங்கள் சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை நடத்தி செம்மணியில் என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிய முன் வர வேண்டுமென மேலும் தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply