தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை!

You are currently viewing தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை!

பொருளாதார மேம்பாட்டுக்கும்,மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிய போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பேருவளை பகுதியில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மாத்திரம் வலியுறுத்துகின்றன. நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை மாறாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை கோருகிறார்கள். பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்னர் எந்த தேர்தலையும் நடத்தலாம்,எவரும் போட்டியிடலாம்.

ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஜனநாயகம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் உண்மையில் ஜனநாயக போராட்டமா? என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் போராட்டங்கள் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள்.

அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது.மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தொழிற்சங்கங்களின் தேவைக்கு அமைய செயற்பட முடியாது.கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களுக்காக எடுத்த தீர்மானங்கள் அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்தன.தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு அடிபணிய போவதில்லை.

பொருளாதார பாதிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது.இனம்,மதம் என வேறுப்பட்டுக் கொண்டிருந்தால் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.

கடந்த காலங்களை மறந்து எதிர்காலத்தை பற்றி சிந்தித்து, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments