தோல்வியுள்ள ஜனாதிபதியாக போகமாட்டேன்! – கோத்தா சபதம்

You are currently viewing தோல்வியுள்ள ஜனாதிபதியாக போகமாட்டேன்! – கோத்தா சபதம்

தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக போவதில்லை. மக்கள் எனக்கு 5 வருடகால ஆணை வழங்கியுள்ளனர்.

எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிப்பேன். நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகிறேன் . 6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைக்கான உதவிக்காக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து நீண்ட கால எரிபொருள் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளேன்.

சலுகை கொடுப்பனவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். இராணுவத்துக்கும் பொது சேவைக்குமான ஒதுக்கத்தை குறைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக ரத்து செய்து விட்டு வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply