நடுக்கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்கள் படகு: 78 பேர் பலி!

You are currently viewing நடுக்கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்கள் படகு: 78 பேர் பலி!

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு தெற்கு கிரீஸ் கடல் பகுதியில் மூழ்கியதை அடுத்து குறைந்தது 78 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான புலம்பெயர்பவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகு கடலில் மூழ்கியதில் குறைந்தது 78 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், பலர் காணாமல் போய் இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கர விபத்தானது நேற்றிரவு கிரீஸின் தெற்கு பெலோபொனீஸ் பிராந்தியத்தின் தென்மேற்கே 45 மைல் தொலைவில் நடைபெற்றுள்ளது.

மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு பிறகு இதுவரை 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் வரை தீவிரமான தாழ்வெப்பநிலை(hypothermia) பாதிப்பு அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படகில் எத்தனை பேர் வரை பயணம் செய்தனர் என்பது தெளிவாக தெரியவராததால், காணாமல் போன டஜன் கணக்கான நபர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்திற்குள்ளான படகு தெற்கு லிபியாவின் டோப்ரூக் பகுதியில் இருந்து இத்தாலி நோக்கி சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் 6 கடற்படை படகுகள், இராணுவ இடமாற்று விமானங்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள், ஐரோப்பிய யூனியனின் எல்லை பாதுகாப்பு ஏஜென்சியின் ட்ரோன்கள் மற்றும் சில தனியார் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு மீட்கப்பட்டவர்களுக்கான உலர்ந்த துணி மற்றும் மருத்துவ கவனிப்புகளை பெற்று வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments