நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் அதனைத் தெரிவித்தார்.
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
போரின் போது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் இதயத்தை உடைக்கும் கதைகளை இன்று நேரடியாக கேட்டு அறிந்துகொண்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.