நல்லூரானை தரிசிக்க செல்லும் பக்த்தர்களுக்கு அடையாள அட்டைகண்டிப்பாக!

You are currently viewing நல்லூரானை தரிசிக்க செல்லும் பக்த்தர்களுக்கு அடையாள அட்டைகண்டிப்பாக!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழிபடுவதற்கு வருகை தரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் காவல்துறை அறிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்த 25 நாள்கள் இடம்பெறவுள்ளது

சிறப்புச் சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு வெளிநாட்டிலிருந்து வருபவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.

அத்தோடு அடியவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகை தர வேண்டும். அத்தோடு சுகாதார நடைமுறையினை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவி உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாள அட்டையினை காண்பித்து அவர்களது முகம் கமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள