தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் 15.09.2022 அன்று எழுச்சியுடன் ஆரம்பானது
தியாகப் பயணத்தின் ஆறாம் நாளான இன்றைய நாளில் (21.09.2022 ) நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்றது …
7ம் நாள் நினைவேந்தல் நிகழ்வின் ஈகை சுடரினை மாவீரர் கலைநிலாவின் சகோதரன் றேகன் அவர்களினால் ஏற்றிவைக்கப்பட்டன தொடர்ந்து மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.











