நவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்!

You are currently viewing நவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்!

யாழ்மாவட்டத்தின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தின் நவாலியூரில் 09.07.1995 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் வாழ்வில் இரத்தஆறு ஓடிய கரிய நாளை மறக்கமுடியாது.

நவாலிப்படுகொலை என்பது தமிழ் மக்களால் மறக்க முடியாத ஆறாத காயம். வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கைக்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். குழந்தைகள் முதல் பெண்கள் வயோதிபர் என உறவுகள் ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து எந்த காலத்திலும் அழிக்க முடியாது.

பகிர்ந்துகொள்ள