யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பகுதியில் மனைவியை மதுபான போத்தலால் தாக்கிய கணவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியராக பணியாற்றும் குறித்த பெண் வர்த்தக நிலையமொன்றையும் நடத்தி வருகிறார்.
சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில் கடைக்குள் புகுந்த கணவர் மதுபான போத்தலால் மனைவைியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அதன் பின்னர், பலத்த காயங்களுடன் மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மனைவியை தாக்கிய கணவர் தப்பியோடி நிலையில் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.






