நாடளாவிய ரீதியில் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகள்!

You are currently viewing நாடளாவிய ரீதியில் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகள்!

நாடளாவிய ரீதியில் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

துப்பாக்கிகள் தொடர்பில் துப்பு வழங்கும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும், பொது மக்களையும் ஊக்குவிக்கும் நோக்கில், பரிசுத் தொகையின் பெறுமதியை ஒரு மாத காலத்திற்கு அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அனைத்து பொலிஸ் நிலையத் தளபதிகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திரான் அலஸின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பதிவாகிய சில குற்றச் செயல்கள் காரணமாக சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட முழுவதும் புழங்குவதை அவதானிப்பதாகவும், இந்த நிலைமை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கும் தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் பயம் பொதுமக்கள் தகவல் வாழங்க முடியும்.

அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர்கள், பிரதிப் பொலிஸ் பரிசோதகர்கள், கட்டளை அதிகாரிகள், பணிப்பாளர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அரச அதிகாரிகள், தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அதிகாரிகளையும், தனியார் தகவல் தருபவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வெகுமதிகளை வழங்கவும், ஒரு மாத காலத்திற்கு பணத்தின் மதிப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்படும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதி பணம் வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments