தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இல்லம் முன்பாக இன்று பகல் சிங்கள கடும் போக்கு இனவாதியும் தேரருமான சீலரத்ன ஹிமி, தலைமையில் காடையர்களால் அடாவடித்தன அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (25.08.2023) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இல்லம் முற்றுகையிடப்படும் என ஏற்கனவே சிங்கள கடும்போக்கு இனவாத கட்சியான பிந்துலு கெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன் வில வால் அறிவிக்கப்பட்டு அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே திட்டமிட்டவாறு இந்த இனவாதச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமையால் பெருமளவு காவல் துறையினரும்,சிறப்பு அதிரடிப் படை யினரும் குவிக்கப்பட்டு காணப் படுகின்றனர் என்பது நோக்கத் தக்கது.