இலங்கை நாடாளுமன்றத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால், நாடாளுமன்றக்கட்டடத்துக்கு அருகில் காவல்துறை அடிதடி நடத்தியதாகவும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியதாகவும், அதியுச்சமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான வாயிற்கதவை உடைப்பதற்க்காக “ஜே.சி.பி” இயந்திரத்தை போராட்டக்காரர்கள் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.