அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் விளைவித்ததாக அடையாளம் காணப்பட்டு இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதற்கு அதிபர் “Trump” முயற்சி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் கலவரம் விளைவித்ததோடு, நாடாளுமன்றத்தை பலவிதங்களிலும் அவமதிப்புக்கும் உள்ளாக்கிய அனைவரும், அதிபர் “Trump” இன் ஆதரவாளர்கள் என அறியப்பட்டுள்ள நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்கு முதல் நாளில் அதிபர் “Trump” பொது மன்னிப்புக்கான அறிவித்தலை விடுக்கலாமென எதிர்வுகள் கூறப்படுகின்றன.
மேற்படி விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள “CNN” நிறுவனம், தனது ஆதரவாளர்கள் என அறியப்பட்டவர்களுக்கான சுமார் 100 பொது மன்னிப்பு அறிவித்தல்களை அதிபர் “Trump” விடுக்கலாமெனவும், எனினும், நாடாளுமன்ற வளாகத்தில் கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு இவ்வாறு மன்னிப்பளிக்கப்படுவதை அதிபர் “Trump” இன் நெருங்கிய சகாக்கள் விரும்பவில்லையெனவும் மேலும் தெரிவிக்கிறது.