நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை அதிரடியாக நீக்கிய உக்ரைன் ஜனாதிபதி!

You are currently viewing நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை அதிரடியாக நீக்கிய உக்ரைன் ஜனாதிபதி!

ரஷ்யாவிற்கு எதிரான இந்த போருக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை என குறிப்பிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை நீக்கியுள்ளார். பிப்ரவரி 2022ல் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் பாதுகாப்பு ஸ்தாபனத்தின் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய நடவடிக்கை இதுவென கூறப்படுகிறது.

நாட்டு மக்களுக்கான காணொளி செய்தி ஒன்றில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவை பதவி நீக்கம் செய்து, அவருக்குப் பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்குமாறு இந்த வாரம் நாடாளுமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2021ல் இருந்தே உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக ரெஸ்னிகோவ் செயல்பட்டு வருகிறார். ரஷ்யாவுக்கு எதிரான போரை முன்னெடுத்து செல்வதற்கு உதவுவதற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் மேற்கத்திய இராணுவ உதவியைப் பெற ரெஸ்னிகோவ் உதவியுள்ளார்.

ஆனால் அவரது அமைச்சகத்தைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளால் சிக்கித் தவிக்கிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. குறித்த குற்றச்சாட்டுகளை ரெஸ்னிகோவ் வெறும் அவதூறு என்றே புறக்கணித்துள்ளார்.

மட்டுமின்றி, போர் காலத்தில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தீவிரமாக பரப்புரை செய்துவரும் நிலையில், ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு வெளியாகியுள்ளது.

போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற மன நிலைக்கு உக்ரைன் மக்கள் தள்ளப்பட்டுள்ள சூழலில், முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு இடமில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த 550 நாட்களுக்கும் மேலாக ரஷ்யாவுக்கு எதிரான போரை முழுமையாக முன்னெடுத்தவர் ரெஸ்னிகோவ் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments