உலகெங்கிலும் உள்ள நைஜீரியாவின் தூதர்களை திரும்ப அழைக்க ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் Ajuri Ngelale தெரிவிக்கையில், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வருங்கால பார்வையாளர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சேவைகளை வழங்குவதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அனைத்து தூதர்களையும் திரும்ப அழைத்த நிலையில், நைஜீரியாவின் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியா நாடானது 76 தூதரகங்கள், 22 உயர் கமிஷன்கள் மற்றும் 11 தூதரகங்களை உள்ளடக்கிய 109 தூதரக பணிகளை உலகளவில் கொண்டுள்ளது. பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டின் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி டினுபு, பொதுச் சபையின் ஒருபுறம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அத்துடன், மாதத்தின் பிற்பகுதியில் நடைபெறும் G20 கூட்டத்தின் போது பிரேசில், இந்தியா, தென் கொரியா மற்றும் ஜேர்மனி நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க டினுபு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.