நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம்) அரசால் அவசரமாகக் கொண்டு வரப்பட்டதற்கு காரணம் என்ன? இந்தச் சட்டமூலம் இருண்ட யுகத்தையே உருவாக்கும். ஆனால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வாரம் ஒரு ஆய்வு மையம் நடத்திய ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். அங்கே அரச தரப்பின் முக்கியஸ்தர்களும், எதிர்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கூட வந்திருந்தனர்.நாட்டு மக்கள் மிகப் பெருமளவில் மதிக்கின்ற கல்விமான்கள் அதில் பங்கேற்றிருந்தனர். அந்தச் சிவில் சமூகத் தலைவர்கள் எக்காரணம் கொண்டும், தீவிரவாதப் போக்குடையவர்களோ அல்லது பொறுப்பற்றவர்களோ அல்லது குழப்பவாதிகளோ என்று சொல்லக்கூடியவர்கள் அல்லர். மாறாக – மிக நிதானமாகவே தமது கருத்துக்களை தெரிவிப்பவர்கள். எக்காரணம் கொண்டும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாகச் செயற்படுபவர்கள் அல்லர். எக்காரணம் கொண்டும் தேர்தல் அரசியலிலோ, கட்சி அரசியலிலோ ஈடுபடுபவர்களும் அல்லர். அப்படிப்பட்டவர்களே – இன்றைக்கு இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தைத் திட்டமிட்டு மறுதலிக்கின்ற மற்றும் இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றார்கள்.
அதனுடைய முக்கியமான விடயமாகவே இந்த நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலமும் அமைந்துள்ளது என்று தெரிவிக்கின்றார்கள். ஆகவே – இவ்வளவு தூரத்துக்கு கண்டனங்கள் உள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் உதவிகள் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அதே சர்வதேச சமூகத்தைப் பகைக்கின்ற வகையில் இந்தச் சட்டமூலத்தைத் திருத்தாமல் நிறைவேற்றுவது அனைத்துமே – இந்த அரசு தன்னுடைய இருப்பையும் தன்னுடைய நலன்களையும் மட்டுமே பார்க்கின்றதேயொழிய, மக்களின் உண்மையான குரல்கள் கருத்துக்களுக்குப் பயப்படுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது.
அந்தவகையில் மிகவும் இருண்ட யுகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துகின்ற வகையில் இவர்கள் செயற்படப் போகின்றார்கள் என்பதே இதன் மூலம் நிரூபிக்கப்படுகின்றது.
ஆனால், மக்கள் அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. உண்மையான குரல்கள் கருத்துக்களுக்குப் பயப்படுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. அந்தவகையில் மிகவும் இருண்ட யுகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துகின்ற வகையில் இவர்கள் செயற்படப் போகின்றார்கள் என்பதே இதன் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. ஆனால், மக்கள் அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.” – என்றார்.
இதேவேளை
சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.