நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு!

You are currently viewing நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு!

“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”

“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே!

சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 சுழலாண்டு முறையும் பார்ப்பனியம் திணித்த அறிவுகெட்ட முறையாகும்.

இதையும் ஆய்வு செய்து நம் அறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது.

திருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது. பின்னர் 18.11.1935இல் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்குத் தலைமை வகித்த மறைமலையடிகள் மீண்டும் இதை உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கிருத்து ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கணக்கில் கொள்ள வேண்டும். 2011 + 31 = 2042.

நாமும் இதைச் செயல்படுத்துவோம்.

தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான் – பாவாணர்

ஆம் தோழர்களே, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா இரண்டும் தை முதல் நாளே.

பகிர்ந்துகொள்ள