ஆயிரம் ஆயிரம் வீரர்களின்
கனவுகளில்
சவாரிவிட்டவர்கள்
ஓடி ஒழிந்திருப்பார்கள்
என்று ஒருபோதும்
நினைத்திருக்கமாட்டார்கள்!!
தேசியத்தலைவரின்
சிந்தனைகளை
நேரடியாக
பருகிவந்தவர்கள்
தூரச்சென்று
துரோகம் இழைப்பார்கள்
என்று
மாவீரர்கள் ஒருபோதும்
நினைத்திருக்கமாட்டார்கள்!!
மாவீரரின்
இரத்தத்தில்
புராணங்கள்
பாடியோர்
போர் ஓய்ந்ததும்
யாரோ போல்
சுருண்டு சுயநலத்துக்குள்
வீழ்வார்கள் என்றும்
எள்ளளவும்
நினைத்திருக்கமாட்டார்கள்!!
காவல்த்தெய்வங்கள்
கண்முன்னே
மண்ணில் சாதனைகள்
நிகழ்திய தருணங்களில்
போர்ப்பரணி பாடிய வாய்கள்
பெரும் அழிவுக்கு பின்
இழிவாகி முனகித்திரிவார்கள்
என்று
மண்னை முத்தமிட முன்
கனவிலும் நினைத்திருக்க
மாட்டார்கள்!!
தலைவனின் புகழ் பாடி
உயர்ந்தவர்கள்
தரணியெங்கும்
மாவீரர் தியாகம்
பேசி முகம் காட்டியவர்கள்
கடைசிச்சண்டையோடு
காலைவாருவார்களென்று
துளியளவும்
நினைத்திருக்கமாட்டார்கள்
எங்கள்
தூயவர்கள்!!