நினைவுத்திறனற்ற “நேட்டோ” செயலர்! தாக்கும் ரஷ்யா!!

You are currently viewing நினைவுத்திறனற்ற “நேட்டோ” செயலர்! தாக்கும் ரஷ்யா!!

“நேட்டோ” பொதுச்செயலாளர் “Jens Stoltenberg” நினைவுத்திறனற்றவர் என நினைக்கத்தோன்றுகிறது என, ரஷ்ய பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவர் “Medvedev” தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விடயத்தில் ரஷ்யா வெல்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும், ரஷ்ய அதிபர் புதின் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரஷ்ய எல்லைகளை “நேட்டோ” நெருங்கி விட்டது எனவும், ரஷ்யாவை சுற்றிலும் மேலதிகமான நாடுகள் “நேட்டோ” வில் இணைந்துகொள்வதற்கும் ரஷ்ய அதிபர் வழிவகை செய்துள்ளார் எனவும் “Jens Stoltenberg” தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதிலளித்த போதே, “Medvedev” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில் யார் வென்றார்கள் என்பதை “Jens Stoltenberg” மறந்துவிட்டாரெனவும், தனது அனுமானத்தின்படி “நேட்டோ” பொதுச்சயலாளர் நினைவுத்திறன் குறைந்தவர் எனவே நினைக்கத்தோன்றுகிறது எனவும் “Medvedev” தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஹிட்லரின் நாசிப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்த நோர்வேயை விடுவிப்பதிலும், இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும் ரஷ்யா உள்ளிட்ட அன்றைய சோவியத் ஒன்றியம் பெரும்பங்கு வகித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. நோர்வேயை நாசிகளிடமிருந்து முற்றாக விடுவித்த சோவியத் ஒன்றிய வீரர்களை நினைவுகூரும் நினைவிடங்கள் நோர்வேயின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டிருக்கின்றமை நினைவுகூரத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply