நினைவேந்தல்களை தடுக்க அரச புலனாய்வாளர்கள் பல தளங்களிலும் முயற்சிக்கின்றார்கள்
இதற்காக தங்களது புலனாய்வு முகவர்களில் ஒருவரான பிரபல கஞ்சா விற்பனையாளர் கீர்த்திஸ்ரீ தேசமானிய அருண் சித்தார்த் சேரை இறுதியாக களமிறக்கி இருக்கின்றார்கள்
இயக்கத்தால் மரணமடைந்தார்கள் என ஒரு பட்டியலை உருவாக்கி தவறான பொய்களை பரப்புவதால் தாங்கள் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என புலனாய்வாளர்கள் சிந்திக்கின்றார்கள் போல இருக்கின்றது
1995 ஆம் ஆண்டு சுகவீனம் காரணமாக சாவடைந்த பாராளமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்கள் 1985 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார் என பட்டியலிட்டு இருக்கின்றார்கள்
மன்னார் வங்காலையில் இராணுவத்தினரால் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி இரு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகக் கோரமாகப் சாவடிக்கபட்டனர். இந்த கோர சம்பவமும் இயக்கத்தின் கணக்கில் எழுதப்பட்டு இருக்கின்றது
பாராளமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன் அவர்களின் தந்தையார் பாராளமன்ற உறுப்பினர் திரு தருமலிங்கம் இயக்கத்தால் மரணமடைந்தார் என்று கூட பட்டியலிட்டு இருக்கின்றார்கள்
திருமதி விஜயகலா மகேஸ்வரன் பாராளமன்றத்தில் தனது கணவர் திரு மகேஸ்வரன் அவர்களின் சாவுக்கான சூத்திரதாரிகளை அடையாளம் காட்டிய பின்னரும் அவரையும் அதே பட்டியலில் சேர்த்து இருக்கின்றார்கள்
தினமுரசு பத்திரிகை ஆசிரியர் திரு அற்புதன் மரணமும் இயக்க கணக்கில் எழுதப்பட்டு இருக்கின்றது
பத்திரிகையாளர் பால நடராஜா அய்யர் மரணத்தோடு சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகள் பற்றி இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுவுள்ள போதும் அதுவும் இயக்கத்தின் பேரில் கணக்கு காட்டி இருக்கின்றார்கள்
இதுபோதாதென்று அதிபர் சிவகடாச்சம் அவர்களின் சாவை கூட பட்டியலில் சேர்த்து இருக்கின்றார்கள்
இங்கே எந்த அவல மரணங்களும் கொண்டாட கூடியது அல்ல
எல்லாமே கண்டனத்துக்கு உரியவை என்பதில் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. நீதியான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் குறைந்தபட்சம் அடையாளம் காணப்பட வேண்டும்
ஆனால் அதை செய்யாமல் மரணங்கள் மீது வெறும் பொய்களை தொடர்ச்சியாக பரப்பி எதை சாதிக்க முடியும்
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் மரணத்தோடு தொடர்புடைய முஸ்லீம் ஆயுத குழுவை காப்பாற்ற இராணுவ புலனாய்வாளர்கள் செயற்கையாக பேரில் போலி ஆதாரங்களை உருவாக்கினார்கள் என குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளே அம்பலப்படுத்தி இருக்கின்றார்கள்
மீண்டும் அதே பாணியில் மரணங்கள் மீது முட்டாள்தனமான பொய்களை பரப்பி செயற்கையான ஆதாரங்களை உருவாக்கி நினைவேந்தல்களை தடுக்க முயற்சிக்கின்றார்கள்
சர்வதேச ரீதியாக ஜனநாயக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நினைவேந்தல்களை தடுப்பதற்காக
வடக்கு கிழக்கு நீதிவான்களை அழுத்தத்திற்கு உட்படுத்துகின்றார்கள்
கல்வி சார் அதிகாரிகளை நெருக்கடிக்குள் தள்ளுகின்றார்கள்
வன்முறைகளை ஏவி விடுகின்றார்கள்
தற்போது அருண் சித்தார்த்துக்கு பணம் செலவழித்து பொய்களை பரப்புகின்றார்கள்
அரச பள்ளிக்கூட மாணவர்களுக்கான சீருடை துணியை கூட பெற்று கொடுக்க பணம் இல்லாமல் சீனாவுடன் தங்கியிருக்கும் இலங்கை தீவு நினைவேந்தல்களை தடுக்க லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்கின்றது
– இனமொன்றின் குரல்