24 வயதே நிரம்பிய Anrina De Riso கூறுகையில், இப்போதைய சூழ்நிலையில் நியுயோர்க் மாநிலத்தில் மிகவும் குழப்பமான சூழ்நிலை மற்றும் அதிர்ச்சியூட்டும் நிலமைகள் காணப்படுகிறது. இங்கே நான், ஒவ்வொரு நாளும் பல அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களைச் சந்திப்பதாகவும், இறந்தவர்களை வெளியேற்றுவதற்கான போராட்டத்தைக் நேரில் கண்டுள்ளேன் என்றும் கூறுகிறார்.
மேலும் இந்த தொழில் எமது பரம்பரைத் தொழில். இதனை நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாம் செய்வதாக அறிந்துள்ளேன். எனது தந்தை கடந்தகால சோதனைகள் குறித்தும் என்னிடம் கூறி இருக்கின்றார்.
எமது தொழில் நிறுவனம் ஏழாகப் பிரிக்கப்பட்டு இயங்குகிறது.
ஆனாலும் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் புதிய பணிகளை எடுக்க முடியாமல்
உள்ளதாகும்.
மற்றும் ஏப்ரல் முழுவதும் முழுமையாக முன் பதிவில் உள்ளது இதே வேளை நாங்கள் பல தலைமுறைகளாக பணியாற்றிய குடும்பங்கள் இப்போது எங்களிடம் வரும்போது நான் இல்லை என்று சொல்ல முடியாதுள்ளது. காரணம் அவர்கள் எங்களைத்தான் நம்பி இருப்பவர்கள்.
அதனால்தான் , இந்த மிகவும் நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கு உதவுவதை மறுக்க முடியாதுள்ளது. இவர்களுக்கு கஸ்ரமான சூழ்நிலையில், அதாவது இப்ப உதவாவிட்டால் நாங்கள் இந்த தொழிலில் இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 80க்கு மேற்பட்ட உடல்களை நாம் எடுத்துச் செல்வோம் என்றும் .
மற்றும் அமெரிக்காவில் தான் 20,000ஆயிரத்துக்கு மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளது.
முக்கியமாக ஒரே நாளில் 2,000 பேர் இறந்தது என்பது அமெரிக்காவில் தான் என்றும் தெரிவித்துள்ளார்
மற்றும் நான் கொரோனா வைரசின் நெருக்கடியின் மத்தியில் வேலை செய்தாலும் கொவெத் 19 க்குப் பயப்படவில்லை என்னும் தனது கருத்தினைப் பதிவிட்டுள்ளார் Abrina De Riso.