அமெரிக்காவில், “கொரோனா” வால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் நகரத்தையும், அது அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூயோர்க் நகரத்தின் ஆளுநரோடு மேற்கொண்ட உரையாடல்களின்பின் இதனை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், நியூ ஜெர்ஸி மாநிலத்தின் பகுதிகளையும் தனிமைப்படுத்த ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.