யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் வீட்டில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களை சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த சிறுமி (9 வயது) ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த தகவலை தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில் அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சித்தங்கேணிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரித்த போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நபரை கோப்பாய் கொண்டு வந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர். அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் குறித்த நபர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரிய கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும் குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிபதியின் வாஸ்தலத்தில் ஆயர்படுதப்பட்டுள்ளனர்.