நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க கூடாது!

You are currently viewing நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க கூடாது!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றக் கூடாது என்று மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச கண்டியில் அஸ்கிரி – மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டபோது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி தொடர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் 13ம் திருத்தச் சட்டம் இந்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்று தற்போதைக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியமானது.

அதற்குப் பதிலாக அரசியலமைப்புத் திருத்தம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் அதிகரித்து விடும் என்றும் மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply