நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்? – சீமான் கேள்வி!

You are currently viewing நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்? – சீமான் கேள்வி!

நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி உள்ள “உயிர் தமிழுக்கு” என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “நீட் தேர்வானது போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது.

அண்மையில் நீட் தேர்வில் முறைகேடு செய்து 50க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் சிக்கினர். அப்போது நீங்கள் போலி மருத்துவர்களை உருவாக்குகிறீர்களா? தரமான மருத்துவர்களை உருவாக்குகிறீர்களா?

இந்தியாவில் நடத்தப்படும் நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும். அதற்கு இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? வட மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் எந்தவொரு பெண்ணும் தோடு, மூக்குத்தியை எல்லாம் கழற்றவில்லை.

ஆனால், என் மாநிலத்தில் மட்டும் எல்லாவற்றையும் கழற்ற வைக்கின்றீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் இவிஎம் இயந்திரங்களில் எதுவும் வைக்க முடியாது என்று சொல்லுகிறீர்கள்” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments