நீதிமன்றத்தின் அனுமதியை மறுத்து அடாவடியில் இறங்கிய தொல்லியல் திணைக்களத்தினர்!

You are currently viewing நீதிமன்றத்தின் அனுமதியை மறுத்து அடாவடியில் இறங்கிய தொல்லியல் திணைக்களத்தினர்!
இன்றைய தினம் (18.08.2023) நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வினை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.
இதன்போது அதிகளவான பக்தர்கள் , மதகுருமார் , பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொங்கல் நிகழ்வில் நீதிமன்ற கட்டளையினையும் மீறி தொல்லியல் திணைக்களம் பல கட்டளைகளை பொங்கல் பூசை வழிபாட்டிற்கு விதித்தது.
தாங்கள் சொல்லும் ஒரு இடத்தில் மாத்திரம் தகரம் வைத்து நெருப்பு மூட்டி பொங்கல் பொங்க வேண்டும். அதேநேரம் ஐயனார் இருந்த இடத்திற்கு யாரும் செல்ல முடியாது படைக்கவும் முடியாது. அதன் முன் வாசலில் பொங்கிப் படைக்க முடியும் என வலியுறுத்தினார்கள்.
பக்தர்கள் நான்கு பொங்கல் பானையுடன் பொங்கச் சென்றார்கள். இதை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அணியினர் இரண்டாவது அடுப்பை மூட்ட முற்பட்டனர். இதன்போது தொல்லியல் திணைக்களத்தினர் தடுத்தனர் இதன்போது கடும் முறுகல் நிலை ஏற்பட்டது. இறுதிவரை தொல்லியல் திணைக்களத்தினர் தடுத்தனர் அனைத்து பொங்கல் பானையும் ஒரு அடுப்பில் மாறிமாறி பொங்கி முடித்தனர்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply