வடக்கில் நான்கு பேர் தவறான முடிவால் மரணம்!

You are currently viewing வடக்கில் நான்கு பேர் தவறான முடிவால் மரணம்!

வடக்கில் நான்கு பேர் தவறான முடிவால் மரணம்! 1

, மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

நேற்று காலை மன்னார் உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான டிலக்‌ஷன் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதே நேரம் மன்னார் நறுவலிக்குளம் மாதிரிகிரமத்தை சேர்ந்த றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான யுவதி நேற்று இரவு தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார் .

இந்த நிலையில் ஒரே நாளில் இரு தற்கொலை மரணங்கள் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.

இம் மாத ஆரம்பத்தில் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

வவுனியா, புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இன்று (18) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 40 வயதுடைய ரூபன் என்பவரே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

வாகனம் திருத்தும் தொழில் புரியும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த நபரின் மனைவி வெளியில் சென்று திரும்பியவேளை தன் கணவர் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.

தொடர்ந்து, கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவிக்க, பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் வவுனியாவில் விபத்தில் ஒருவரும், நீரில் மூழ்கி இரு சிறுவர்களும், தூக்கில் தொங்கிய இந்த நபருமாக மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

யாழில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் நேற்று (17) பிற்பகல் 70 வயதான வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் பின்புறமாக நின்ற மாமரத்தில் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதியவரின் இறப்புக்கான  காரணம் வெளியாகாத நிலையில்  சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கொடிகாமம் சிறீலங்கா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments