நேற்றைய தினம் 04.01.2021 Strasbourg மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை , ஐரோப்பியபாராளுமன்றத்தின் முன் ஆரம்பித்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தும் மனிதநேய ஈருருளிப்பயணம் இரண்டாம் நாளாக 230Km தொலைவு கடந்து 05.01.2021 அன்று Lérouville மாநகரசபையினை வந்தடைந்தது.
இன்றைய நாளின் சந்திப்புக்களாக Moussey , Nancy , Lérouville மாநகரசபையில் முதல்வருடனானகலந்துரையாடலினை மேற்கொண்டனர். மேலும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவின் மத்தியிலும் பயணித்து வரும்மனித நேய செயற்பாட்டாளர்களை இன் முகத்தோடு வரவேற்று சுடுபானங்களும் பகிர்ந்தளித்து தமிழர்களின்கோரிக்கை அடங்கிய மனுவினை பெற்றுக்கொண்டார்கள்.
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் எம் மக்கள் மீது மிலேச்சத்தனமாக இனவழிப்புக்களையும் மனித உரிமை மீறல், சர்வதேச சட்டவிதி மீறல், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் போன்றவற்றை சிறிலங்கா பெளத்த பேரினவாத அரசுபுரிந்துவிட்டு பல வருட காலமாக தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேசத்திடமும் சர்வாதிகாரப்போக்கினையேஎடுத்துக்காட்டுவதாய் அமைகின்றது. எனவே தொடர் எழுச்சிப் போராட்டாங்களால் தமிழர்களின் நியாயமானகோரிக்கைகளை சர்வதேசத்திடம் எடுத்துக்கூறி சிங்களப் பேரினவாத அரசினை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதஉரிமைகள் ஆணையகத்தின் உதவியுடன் பாதுகாப்பு சபையூடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின்முன்னிறுத்துவது காலத்தின் தேவையாகும்.
2009 ஆண்டிற்கு பின்னரும் தொடரும் தமிழர்களின் கலாச்சார, வரலாற்று பண்பாட்டு விழுமியங்களினைதிட்டமிட்டமுறையில் சிதைப்பதும் தமிழர்களின் நிலங்களை அபகரித்து திட்டமிட்டே இராணுவமயமாக்கலினைமேற்கொண்டு தொடரும் இனவழிப்புக்களையும் மேற்கோள் காட்டி சந்திப்புக்கள் இடம்பெற்றன.
மேலும், கலந்துரையாடலில் பங்குபற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதைந்து கிடக்கும் எம் உள்ளங்களில் எமது போராட்டத்தின் தொடர்ச்சியே நம்பிக்கை மருந்தினைஇட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் புலம் பெயர் தேசத்தில் வாழும் உறவுகளின் பங்கு மிக முக்கியம் பெற்றுஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
பல அடக்குமுறைகளுக்கு மத்தியில் வாழும் எம் உறவுகளின் இன்னல்கள் தீர்க்கப்பட்டு தமிழீழ மண்ணில் சுதந்திரமாகவாழும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாம் அனைவரும் எம் போராட்டத் தொடர்ச்சியின் பலம் அறிந்து இன்றுபுலம் பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஈருருளிப்பயணம்,நடைபயணம்… போன்ற அறவழிப்போராட்டங்களில் ஈடுபடுவது போற்றுதலுக்குரியனவே. எனவே எதிர்வரும் 46 வது மனித உரிமைகள்ஆணைக்குவின் கூட்டதொடர் 22.02.2021 அன்று ஆரம்பிக்க இருக்கும் நிலையில் , அங்கே தமிழர்களின் நியாயமானகோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டு பாதுகாப்பு சபையில் பெளத்த சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசின்இனவழிப்புக் குற்றவிசாரணை ஒப்படைக்கப்பட வேண்டும். அதனை அண்மித்துக்கொண்டிருக்கும் காலத்தினைஎண்ணி மாவீரர்கள் தம் உயிர் மூச்சில் ஏந்திய கனவுகளை ஈடேற்ற நாம் இக்கட்டான சூழலிலும் போராடுவதுதமிழர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்.











